TVK வெற்றியை கொண்டாடிய கோவை காங்கிரஸ் கட்சி- தொண்டர்கள் குழப்பம்…

கோவை: தவெக வெற்றியை கோவை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடியதால் குழப்பம் நிலவியது.

Advertisement

தமிழக வெற்றி கழகம் (தவெக) சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதை தொடர்ந்து, கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர்.

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில், 108 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது. இதுவரை திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்த நிலையில், இம்முறை புதிய அரசியல் மாற்றமாக தவெக வெற்றி பெற்றது தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்த வெற்றியை முன்னிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான தவெக வெற்றியை கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவை டவுன்ஹால் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில், மாவட்ட துணைத் தலைவர் பைசல் தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம் நடைபெற்றது.

Advertisement

தவெக வந்தாச்சு, காங்கிரஸ் வெற்றி என்ற முழக்கங்களுடன் விசில் அடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், தவெக வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடியதால், திமுக கூட்டணி கட்சியினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.