Part-Time Job ஆசை காட்டி ரூ.5.10 லட்சம் அபேஸ்! கோவையில் அதிர்ச்சி

கோவை : கோவையில் ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக் கூறி வாலிபரிடம் ரூ.5.10 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கோவை ஒத்தக்கால்மண்டபம் டி.ஏ.எஸ். நகரைச் சேர்ந்த 27 வயது வாலிபர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைனில் பகுதிநேர வேலை தேடி வந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரை தொடர்புகொண்டு, கூகுள் மேப்பில் குறிப்பிட்ட இடங்களுக்கு ரிவ்யூ வழங்கும் ஆன்லைன் பகுதிநேர வேலை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய வாலிபரை, மர்ம நபர்கள் டெலிகிராம் குழுவில் இணைத்துள்ளனர். தொடர்ந்து, சில எளிய டாஸ்க்குகளை வழங்கியுள்ளனர். அந்த டாஸ்க்குகளை முடித்ததற்காக ரூ.500, ரூ.1,000, ரூ.5,000 என சிறிய தொகைகளை அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர்.

பின்னர், அடுத்தகட்ட டாஸ்க்குகளை பெற குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்றும், டாஸ்க்குகளை முடித்ததும் முதலீடு செய்த பணத்துடன் கூடுதல் தொகையையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

Advertisement

இதனை உண்மை என நம்பிய அந்த வாலிபர், மர்ம நபர்கள் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் அனுப்பியுள்ளார்.

ஆனால், அதன் பின்னர் அவருக்கு எந்த பணமும் திரும்ப வரவில்லை. இதையடுத்து மர்ம நபர்களை தொடர்புகொண்டு பணத்தை திரும்ப கேட்டபோது, மேலும் பணத்தை முதலீடு செய்யுமாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement

அப்போதுதான் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த வாலிபர், இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்குகள் மற்றும் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

முதல்வர் பேச்சை கண்டித்து கோவையில் திமுக ஆர்ப்பாட்டம்- விஜய்க்கு சம்மட்டி அடி கொடுப்போம் என தெரிவிப்பு …

கோவை: முதல்வரின் சட்டசபை பேச்சை கண்டித்து ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் துரை செந்தமிழ் செல்வன், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற...

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...