கோவையில் வாலிபர் ரயிலில் அடிபட்டு விபத்து!

கோவை: கோவையில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

கோவை – பீளமேடு ரயில்வே தண்டவாளப் பகுதியில் நேற்று வாலிபர் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்து கிடந்தார்.

இதனைப் பார்த்த அதிர்ச்சையடைந்த பொதுமக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் வாலிபரின் உடலைக் கைப்பற்றினர்.

மேலும், அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 35 மதிக்கத்தக்க அந்த வாலிபர் கருப்பு நிற பனியன், காவி நிற வேட் டி அணிந்திருந்தார்.

Advertisement

அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. அவரது உடமைகளிலும் எந்த ஒரு ஆவணங்களும் இல்லை.

இதனிடையே அந்த வாலிபர் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி பலியானாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து கோவை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Amazon Link 2
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...