இருக்குற டாஸ்மாக் போதாதா: கோவையில் ஆத்திரத்தில் மக்கள் சாலைமறியல்!

கோவை: கோவையில் புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Advertisement

வெள்ளலூர் பகுதியில் புதிதாக திறக்கபட உள்ள FL2 மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புறவழிச்சாலையில் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் L&T புறவழிச்சாலை அருகே புதியதாக FL2 மதுபான கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடையின் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், புதிய மதுபானக்கூடம் சில நாட்களில் திறக்கப்பட உள்ளது. மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான கூடம் அமைக்க தொடர்ந்து அப்பகுதி மக்கள எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை திடீரென வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மருதாச்சலம் தலைமையில் அக்கடையின் முன்பாக பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று L&T புறவழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். அந்த மதுக்கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

“கடை அமைக்கப்படாது என்று உறுதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மீறியும் மன மகிழ் மன்றம் என்ற பெயரில் ஊருக்குள் போதைப்பொருள் விற்பனையை தொடங்கினால், அனைத்துப் பகுதி மக்களையும் திரட்டி, மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்” என்று சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவையில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கோவையில் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வலியுறுத்தி,...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...