கோவையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த ரிப்போர்ட்!

கோவை: கோவையில் அடுத்த 7 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.

இதனிடையே, கோவையில் ஒரு சில இடங்களில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

Advertisement

இன்று (மே 25) மற்றும் நாளை (மே 26) அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கோவையில் கனமழைக்கும், நாளை லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மே 27 முதல் 31ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் இந்த வானிலை முன்னறிவிப்பிற்கு ஏற்ப தங்களது பயணத் திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 25 வயது வாலிபர் மீது, மாநகர காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...