ஈஷாவின் ‘சயின்ஸ் ஸ்பார்க்’: கிராமப்புற மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் புதிய திட்டம்

கோவை: கோவையில் ஈஷா அவுட்ரீச் சார்பில் நடைபெற்ற “சயின்ஸ் ஸ்பார்க்” திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் கிராமப்புற மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இதில் ஈஷாவைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

கிராமப்புற குழந்தைகளுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தைத் தூண்டி, அவர்களை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுத் துறைகள் சார்ந்த உயர்கல்வியை நோக்கி வழிநடத்தும் வகையில் இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது. இதில் ஈஷாவைச் சுற்றியுள்ள கிராமப்புற மற்றும் பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

Advertisement

கடந்த ஓராண்டாக நடைபெற்ற இந்த “ஈஷா சயின்ஸ் ஸ்பார்க்” பயிற்சியில் மாணவர்களுக்கு பல்வேறு அறிவியல் துறைகள் குறித்து சுவாரசியமான நவீனக் கற்றல் முறைகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. குறிப்பாக காணொலி காட்சிப்படுத்துதல், செயல்முறை சோதனைகள், நேரடி களப்பயணங்கள், அறிவியல் கல்வி சார்ந்த திரைப்படங்கள், விளையாட்டு வழிக் கற்றல், வினாடி-வினா போட்டிகள் மற்றும் அறிவியல் விளக்கப்படங்கள் தயாரித்தல் போன்ற பன்முகத் தன்மைகொண்ட செயல்பாடுகள் மூலம் வகுப்புகள் நடைபெற்றன.

CLICK HERE TO READ NEWS: நடுரோட்டில் பெண்ணிடம் ரகளை..! ஆடையை இழுத்த வாலிபர் கைது..!

இந்தப் பயிற்சியில் இயற்பியல், நுண்ணுயிரியல், வானவியல், மண் அறிவியல், கடல் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் துறைகள் குறித்த வகுப்புகள் செயல்முறை விளக்கங்களுடன் நடத்தப்பட்டன. குறிப்பாக ஈஷாவின் மண் ஆய்வுக்கூடத்திற்கு நேரடியாகச் சென்று மண் பரிசோதனை முறைகளை பார்வையிட்டு அறிந்துகொள்ளுதல் மற்றும் ரத்தினம் கல்லூரியின் அதிநவீன ஆய்வகத்திற்குச் சென்று நவீனக் கருவிகள் மூலம் நுண்ணுயிரிகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ளுதல் ஆகிய வாய்ப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

Advertisement

மேலும், பள்ளிப் படிப்பு முடித்த பிறகு எந்தெந்த அறிவியல் துறைகளில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்பது குறித்தும் மாணவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

இதன் ஓராண்டு நிறைவு விழாவில் இஸ்ரோ (ISRO) திரவ இயக்கத் திட்ட மையத்தின் ஓய்வு பெற்ற குரூப் ஹெட் மற்றும் விண்வெளி விஞ்ஞானி மகேஷ் நாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், “மாணவர்கள் தங்களின் பள்ளிப் பருவத்திலிருந்தே கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் அதிக கவனம் செலுத்தி, புதுமையான செயல்முறைத் திட்டங்களை உருவாக்கப் பழக வேண்டும்.

குறிப்பாக பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகும், இளங்கலை பொறியியல் படிப்பிற்கு பிறகும் குறிப்பிட்ட சில நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதன் மூலம் இஸ்ரோவில் பணியாற்றிக் கொண்டே உயர்கல்வியை மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

CLICK HERE TO READ NEWS:கோவையில் கஸ்டமர் போல் வந்து வெள்ளி கொலுசை திருடிய பெண்- சிசிடிவி காட்சிகள்…

தொடர்ந்து, இவ்விழாவில் பங்கேற்ற ரத்தினம் கல்விக்குழுமத்தின் டாக்டர் மாணிக்கம் ராமசாமி பேசுகையில், “ஈஷா சயின்ஸ் ஸ்பார்க் திட்டம் கிராமப்புறக் குழந்தைகளுக்குக் கிடைத்துள்ள மிக அற்புதமான நல்வாய்ப்பாகும்.

இந்த ஓராண்டு சயின்ஸ் ஸ்பார்க் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள மாணவ, மாணவிகள் எங்களது ரத்தினம் கல்லூரியில் உயர்கல்விக்காக சேரும்போது, அவர்களுக்கு அறிவியல் பாடப்பிரிவுகளில் முற்றிலும் இலவசமாக சேர்க்கை வழங்க நாங்கள் முழு மனதுடன் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

ஈஷா வித்யா மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர் திருமறை சாவித்திரி ஆனந்த் வாழ்த்துரை வழங்குகையில், “பொதுவாக அறிவியலை வெறும் தியரியாகப் படிக்காமல் செயல்முறை அறிவோடு கற்றுக்கொள்வது என்பது நகர்ப்புறக் குழந்தைகளுக்குக் கிடைப்பதே ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது.

ஆனால், ஈஷா அவுட்ரீச் அமைப்பு எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் கிராமப்புறங்களில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு இத்தகைய உலகத்தர செயல்முறை அறிவியல் கல்வியை கொண்டு சேர்த்திருப்பது சாதாரண விஷயமல்ல. இது இந்தக் குழந்தைகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.

CLICK HERE TO READ NEWS:தலை, கைகளில் கட்டு- கோவை ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்…

சத்குரு அவர்களின் வழிகாட்டுதலும், ஈஷா அவுட்ரீச் குழுவினரின் அர்ப்பணிப்புமே இதற்கு முக்கியக் காரணம். அடுத்த கல்வியாண்டில் இந்த திட்டத்தில் மேலும் அதிகமான கிராமப்புற மாணவர்களை இணைத்து, இதன் பயன் பலரையும் சென்றடைய எங்களது பள்ளி நிர்வாகத்தின் சார்பில் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்” என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, இவ்விழாவில் ஈஷா ஊரக மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி சிதாகாசா வரவேற்புரை ஆற்றினார். ஈஷா சயின்ஸ் ஸ்பார்க் திட்டத்தின் ஆசிரியரும் நுண்ணுயிரியலாளருமான சரவணகுமார் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார்.

ஓராண்டுப் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் நிறைவாக, விப்ரோ நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளரும், அண்டவியல் ஆராய்ச்சியாளருமான காஞ்சனா முனிரத்தினம் நன்றியுரை ஆற்றினார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த ரிப்போர்ட்!

கோவையில் அடுத்த 7 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.