கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம்ரூ. 45 லட்சம் டிஜிட்டல் மோசடி!

கோவை: தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசில் இருந்து பேசுவதாகக் கூறி கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் ரூ.45 லட்சம் டிஜிட்டல் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் ஜெகதீஸ் நகரை சேர்ந்தவர் குணசேகரன் ( வயது 70). இவர் தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வாட்ஸ் அப் நம்பருக்கு பிரேம்குமார் என்பவர் தொடர்பு கொண்டார்.

Click her to read news கோவையில் 10 மணி நேர போராட்டத்திற்குப் பின் தொழிலாளர்கள் உடல் மீட்பு!

Advertisement

அப்போது பிரேம்குமார் லக்னோவில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். 

அவர் குணசேகரனிடம உங்களது ஆதார் நம்பரை பயன்படுத்தி கர்நாடகாவில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். 

Advertisement

மேலும் அந்த கணக்கிலிருந்து பல்வேறு தவணைகளில் தீவிரவாத இயக்கத்திற்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் அதை குணசேகரன் மறுத்துள்ளார். அதன்பிறகு பிரேம்குமார் குணசேகரனை மிரட்டி பல்வேறு தவணைகளில் ரூ. 45 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார். 

கோவை அருகே சிறுத்தை பீதி; “20 நாட்களாக நடவடிக்கை எங்கே?” – அண்ணாமலை கடும் விமர்சனம்

ஆனால் அதன் பிறகு அந்த பணத்தை அவருக்கு பிரேம் குமார் திருப்பிக் கொடுக்கவில்லை. இது தொடர்பாக குணசேகரன் விசாரித்த பிறகு தான் பிரேம்குமார் மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து குணசேகரன் கோவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் முடியும் தருவாயில் 24மணி நேர குடிநீர் திட்டம்- பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்…

கோவை: 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளதாகவும் கூடுதல் பணிகளை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...