கோவை: கோவை வடவள்ளியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை வடவள்ளி, எஸ்.என். நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (58). இவர் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி மதியம் தனது இருசக்கர வாகனத்தில் இடையார்பாளையம் சாலை, எஸ்.வி. நகர் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது ரமேஷுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த அவர், நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 1-ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





