Coimbatore Weather: அடுத்த 7 நாட்களுக்கான கோவை வானிலை நிலவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துக் கூறியுள்ளது.
கோவையில் அடுத்த ஒரு வாரத்திற்கு பகுதி மேகமூட்டத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் அதிகபட்ச வெப்பநிலை 29.2 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.
ஜூன் 7 (ஞாயிற்றுக்கிழமை)
கோவையில் பல்வேறு பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
ஜூன் 8 (திங்கட்கிழமை)
நாளை வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ்.
ஜூன் 9 (செவ்வாய்க்கிழமை)
இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ்.
ஜூன் 10 (புதன்கிழமை)
பகுதி மேகமூட்டத்துடன் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ்.
ஜூன் 11 (வியாழக்கிழமை)
பகுதி மேகமூட்டத்துடன் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ்.
ஜூன் 12 (வெள்ளிக்கிழமை)
பகுதி மேகமூட்டத்துடன் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ்.
ஜூன் 13 (சனிக்கிழமை)
பகுதி மேகமூட்டத்துடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மழை வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


