கோவையில் கல்லூரி கனவு நிகழ்ச்சி…

கோவை: ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கல்லூரி கனவு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.

கோயமுத்தூர் ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி கனவு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் துவக்கி வைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் சார்பில் அமைக்கப்பட்ட விழிப்புணர்வு அரங்கங்களை பார்வையிட்டார்.

Advertisement

இம்முகாமில் 12ம் வகுப்பு முடித்த மாணாக்கர்கள் உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டுதல் தொடர்பான வழிகாட்டி கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார். இந்த வழிகாட்டி கையேடு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணாக்கர்களுக்கும் வழங்கப்பட்டது. இதில் பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் தொடர்பான விவரங்கள் இடம் பெற்றிருந்தன. இன்று நடைபெற்ற கல்லூரி கனவு நிகழ்ச்சியில் சுமார் 1100 க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்

இம்முகாமில் மாநகராட்சி ஆணையாளர்கட்டா ரவி தேஜா, மாநகராட்சி துணை ஆணையாளர் குமரேசன். முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலர் சரஸ்வதி. ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி பல்வேறு பொறியியல் கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ. கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவ, மாணவிர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துஅரசுப் பள்ளிகளிலும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணாக்கர்கள் அனைவரும் யர்கல்வி நிறுவனங்களில் சேர்வதை 100 சதவீதம் உறுதிசெய்யும் பொருட்டும்12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் அனைவரும் கல்லூரி படிப்புகள் மற்றும் கல்லூரிகள் சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டும் உயர்கல்வியின் முக்கியத்துவம் சார்ந்த விழிப்புணர்வைப் பெறும் பொருட்டும் கல்லூரி கனவு 2026 நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இம்முகாமில் கலந்து கொண்டுள்ள ஏறக்குறைய 1000க்கும் மேற்பட்டோர் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ கல்வி நிறுவனங்களின் 40 அரங்குகளை பார்வையிட்டு, உயர்கல்வி பாடங்கள் குறித்து அறிந்துகொண்டனர்.

Advertisement

இம்முகாமின் மூலம் 373 மாணவர்களுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், 43 மாணவர்களுக்கு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும், 24 மாணவர்களுக்கு ஐ.டி.ஐ கல்வி நிறுவனங்களிலும் நேரடி சேர்க்கை வழங்கப்பட்டது. மேலும், 550 மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கை தொடர்பான தகவல்களைப் பெற்றுச் சென்றனர். கல்வி உதவித்தொகை பெறுவதற்காக 40 மாணவர்கள் விண்ணப்பங்கள் வழங்கியுள்ளனர்.

மேலும், முன்னணி வங்கியின் மேலாளர் கலந்து கொண்டு மாணவர்கள் கல்விக் கடன் மற்றும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...