கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி ஹாக்கி விளையாட்டு மைதானத்தின் பராமரிப்பு பணிகள் குறித்து, மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சிமேற்கு மண்டலம், வார்டு எண் 72-க்கு உட்பட்ட ஆர்.எஸ். புரம் மாநகராட்சி ஹாக்கி விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு ஹாக்கி யூனிட் நிறுவனத்தால்16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் நேஷனல் சேம்பியன்சிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு மாநகராட்சி ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் பராமரிப்பு பணிகள் குறித்து, மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், வார்டு எண் 39-க்கு உட்பட்ட மகாராணி அவென்யூ 5வது தெருவில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில், அடிப்படை வசதிகள் குறித்து குடியிருப்போர் நல சங்கத்துடன் கலந்துரையாடினார். பின்னர், வார்டு எண்.75க்கு உட்பட்ட கிருஷ்ணம்பதி குளக்கரையில் நடைபெற்றுவரும் ஆகாயத் தாமரை அகற்றும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மத்திய மண்டலம், வார்டு எண்.83-க்கு உட்பட்ட நேரு உள் விளையாட்டு மைதானத்தின் எதிரே தலா ரூ.150 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து மற்றும் கபடி உள் விளையாட்டு அரங்கங்கள் மற்றும் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கைப்பந்து உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றையும் மாநகராட்சி ஆணையாளர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.




