கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ESIC பணியாளர்கள் மனு அளித்துள்ளனர்.
தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தக பணியாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டத்தில் ESIC(தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம்) திட்டத்தில் ஒப்பந்த பணியாளர்களாக 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் தனியார் நிறுவனத்தின் மூலம் மண்டல நிர்வாக மருத்துவர் அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள ESIC Dispensary களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பணி நிரந்தரம், ஊதியம் வழங்குவதில் உள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வேண்டும், அரசின் தொகுப்பு ஊதிய முறையில் நேரடி ஊதியம் வழங்க வேண்டும், மாதந்தோறும் சம்பள சீட்டு வழங்கிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும், நிலுவையில் உள்ள அனைத்து ஊதியங்களையும் உடனடியாக வழங்க வேண்டும், இ எஸ் ஐ நிர்வாகமும் ஒப்பந்த நிறுவனமும் இணைந்து பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து பேசிய அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருவதாகவும் தங்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுவதாக தெரிவித்தனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தாங்கள் தற்பொழுது தங்களுக்கு குறிப்பிட்ட பணிகளை காட்டிலும் இதர பணிகளையும் மேற்கொள்ளும் சூழலில் இருப்பதாகவும் எனவே தங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் மேலும் தற்பொழுது வழங்கப்படும் சம்பளமும் குறைவாக இருப்பதாகவும் அதுவும் குறிப்பிட்ட தேதியில் தரப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால் பொருளாதார சிரமத்திற்கு உள்ளாகவும் சுட்டிக்காட்டினர்.




