தனுஷ் ரசிகர்களுக்கு வந்த நற்செய்தி – “கர” படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்!!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “கர” திரைப்படம் ஏப்ரல் 30 வெளியாக உள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கியதால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்துள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷின் 54-ஆவது படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். “ராயன்” படத்திற்கு பிறகு இந்த படம் இவருக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் தனுஷ் “கரசாமி” என்ற பெயரில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

எனவே, இந்த படத்திற்கு “கர” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Advertisement

இந்த படம் 1990-களில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். 1991-ம் ஆண்டு நிலவிய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார வீழ்ச்சியை பின்னணியாகக் கொண்டும், அந்த காலகட்டத்தில் மக்களின் வாழ்வியலையும் அவர்கள் அதை கையான்ற விதத்தையும் துல்லியமாக படம் பிடித்துள்ளார்களாம். இந்த படம் விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் வகையைச் சேர்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை “போர் தொழில்” படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். அந்த படத்தின் விறுவிறுப்பான கதைக்களம் மூலம் திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் இவர். தனது இரண்டாவது படத்தில் தனுஷுடன் இணைந்துள்ளார். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார். மேலும் திங் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் ஓடிடி உரிமையை ‘நெட்ஃப்ளிக்ஸ்’ நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
dhanush kara movie ticket booking

இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். “பிரேமலு” மற்றும் “டியூட்” படங்களின் மூலம் மக்களின் மனதை கவர்ந்தவர் இவர். தற்போது தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இவரின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

dhanush kara movie ticket booking

இந்த படத்தின் “கண்ணம்மா” பாடல் கடந்த மாதம் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் டிரெய்லர் 2026 ஏப்ரல் 20-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் தனுஷ் பொருளாதார சிக்கல்களை சந்திக்கும் இளைஞராகவும், அதிலிருந்து தப்பிக்க வங்கி கொள்ளையில் ஈடுபடுபவராகவும் நடித்துள்ளார். விறுவிறுப்பான காட்சிகளுடன் அவரது புதிய லுக் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

“கர” திரைப்படம் வரும் ஏப்ரல் 30, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நாளில் வெளியாகும் இந்த படம் சுமார் 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு பல இடங்களில் தொடங்கியுள்ளது.

தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து, படக்குழுவினர் தீவிர விளம்பர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என நம்பப்படுகிறது.

கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் இந்த படம் குடும்பங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ஜி.கே.என்.எம். செவிலியர் கல்லூரி திறப்பு; கண் தானத்தில் 76 ஆயிரம் பேரை இணைப்பதே இலக்கு – துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்

கோவை ஜி.கே.என்.எம். செவிலியர் கல்லூரி திறப்பு விழாவில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இந்த ஆண்டு நாடு முழுவதும் 76 ஆயிரம் பேரிடம் கண் தான உறுதிமொழி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...