பஸ் ஸ்டாப்பில் மூச்சு விட முடியல… லங்கா கார்னரில் சுகாதார சீர்கேடு!

கோவை : கோவை லங்கா கார்னர் பாலத்தின் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் கடும் துர்நாற்றம் வீசுவதால், பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் அந்த வழியாகச் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Advertisement

கோவை கடைவீதியில் இருந்து அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் அதிகளவில் கடந்து செல்லும் முக்கிய சாலையாக லங்கா கார்னர் பகுதி உள்ளது. இங்குள்ள பாலத்தின் அருகே, ரயில் வண்டி உணவகத்தை ஒட்டிய சாலையோரத்தில் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது.

இந்த பேருந்து நிறுத்தத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் என தினமும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாலத்தின் அடிப்பகுதியில் சிலர் சிறுநீர் கழிப்பதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதாகக் கூறப்படுகிறது. இதனால், பேருந்துக்காக காத்திருப்பவர்கள் மட்டுமின்றி, அந்த வழியாக நடந்து செல்வோரும் துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

Advertisement

மேலும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் வழியாகவும் இந்தப் பகுதி உள்ளது. தினமும் ஏராளமானோர் இந்த வழியாகச் சென்று வரும் நிலையில், இப்பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேட்டைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

கடும் துர்நாற்றம் காரணமாக பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் மூக்கைப் பொத்திக்கொண்டு நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, லங்கா கார்னர் பகுதியில் சுகாதாரத்தைப் பேணவும், துர்நாற்றம் ஏற்படுவதைத் தடுக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

கோவையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான இங்கு நிலவும் சுகாதார சீர்கேட்டைச் சரிசெய்வதுடன், நகரின் பிற பகுதிகளிலும் சுகாதாரத்தைப் பராமரிக்க அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சாதி பெயர் கொண்ட பகுதிகளுக்கு புதிய பெயர்கள் – கோவை மாநகராட்சியில் கோரிக்கை

கோவை மாநகராட்சி எல்லைக்குள் சாதி பெயர்களில் உள்ள தெருக்கள், ஊர்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என திராவிடர் தளம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...