கோவை: கோவையில் மதுப்பிரியர்கள் பயங்கரமோதல், சேர்களை வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதோடு, சாலையிலும் இறங்கி சண்டையிட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் 11 to 11 பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் நேற்று இரவு மதுப்பிரியர்களுக்கு இடையேற் திடீர் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது மதுப்பிரியர்கள் ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கிக் கொண்டனர். பாரின் உள்ளே ஒரு தரப்பினரும், வெளியேயும் ஒரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனைப் பார்த்த பாரில் இருந்த மற்ற வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இந்த பயங்கர மோதலை அங்கு இருந்த நபர் ஒருவர் தனது மொபைல் போனில் படம் பிடித்து உள்ளார். தற்போது அந்த செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
VIDEO
மக்களின் உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், பொது இடத்தில் அமைந்துள்ள இதுபோன்ற பார்களை உடனே அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





