கோவையில் ஏர் ஹார்ன் பொருத்தி வந்த 26 பேருந்துகளுக்கு அபராதம்…

கோவை: கோவையில் ஏர் ஹார்ன் பொருத்தி வந்த 26 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

கோவை மேற்கு போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் உக்கடம், பெரிய கடை வீதி போக்குவரத்து எஸ்ஐ.,க்கள் அசரப் அலி, சுவாதி மற்றும் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முன்னிலையில் அதிகார்கள் இணைந்து உக்கடம் பஸ் நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் சிறப்பு சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹார்ன்களின் ஒலி அளவு டெசிபெல் மீட்டர் மூலம் பரிசோதிக்கப்பட்டது. அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சத்தம் எழுப்பிய 26 பஸ்களுக்கு உடனடியாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து ஏர் ஹார்ன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல அதிக ஒளி கொண்ட 70க்கும் மேற்பட்ட லைட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement

இதை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் காந்திபுரம் சிக்னல் அருகே சாலை விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது வாகனங்களில் அதிக வெளிச்சம் தரும் ஹெட் லைட் பகுதியில் கருப்பு ஸ்டிக்கர்களை இலவசமாக ஒட்டினர்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஜனநாயகன் பார்த்து அழுவது ஏன்?- கோவை அமைச்சரின் உருக்கமான விளக்கம்…

கோவை: ஜனநாயகன் படம் பார்த்து அழுதது குறித்து அமைச்சர் சம்பத்குமார் விளக்கம் அளித்துள்ளார். கோவை மாநகராட்சி 83வது வார்டுக்கு உட்பட்ட வ.உ.சி., மைதானம் அருகே வாலிபால், கபடி மற்றும் இறகுப்பந்து போட்டிக்கான உள்ளரங்கு விளையாட்டு...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...