நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்ய போவதாக நிச்சயதார்த்த போட்டோவை பதிவு செய்து பின்னர் அதை அழித்துள்ளார் பிரபல நடிகை.
எதார்த்த நடிகை
நடிகை ரித்விகா, ஒருநாள் கூத்து, கபாலி, இருமுகன், ஓநாய்கள் ஜாக்கிரதை, டார்ச்லைட், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, வால்டர், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என பல படங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
அதோடு மட்டுமில்லாமல் விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து 106 நாட்கள் வீட்டிற்குள் இருந்து பிக் பாஸ் டைட்டிலை வென்று அசத்தினார்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், கச்சிதமாக நடிக்கும் திறமை கொண்ட ரித்விகா, பரதேசி படத்தில், முக்கியமான வேடத்தில் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றார்.
இரட்டை வேடத்தில் நடித்து அசத்தல்
பரதேசியை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் பதிந்தார்.
மெட்ராஸ் திரைப்படம் ரித்விகா கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது. கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வரும் ரித்விகா, கடந்த ஆண்டு அனைவராலும் பேசப்பட்ட லெவன் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இவர், கதாநாயகியாக ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.
நிச்சயதார்த்தத்தோடு நின்று போன திருமணம்
கடந்த ஆண்டு ரித்விகா தனது இன்ஸ்டாகிராமில், நிச்சயதார்த்தம் நடந்த போட்டோவை பதிவிட்டு இருந்தார். தனது நீண்டநாள் நண்பரான வினோத் லட்சுமணன் என்பவருடன் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறும் அறிவித்து இருந்தார்.
ரசிகர்கள் பலரும் ரித்விகாவுக்கு வாழ்த்து கூறிய நிலையில், திடீரென எதிர்ப்பாராத சூழ்நிலைகள் காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக நடிகை தரப்பில் கூறப்பட்டது. மேலும் இன்ஸ்டாவில் பதிவிட்ட நிச்சயதார்த்த போட்டோவையும் அவர் டெலிட் செய்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆறுதல் கூறும் ரசிகர்கள்
திருமணம் தள்ளிப்போவது தப்பில்லை, ஆனால் அவர் ஏன் நிச்சயதார்த்த போட்டோவை அழிக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் பலவிதமான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதையடுத்து ரசிகர் ஒருவர், திருமணத்தில் ஏதாவது பிரச்சனையா என கேள்வி எழுப்ப, பதில் அளித்த நடிகை ரித்விகா, வாழ்க்கையில் எல்லாம் நாம் நினைத்தபடி நடப்பது இல்லை என கூறியுள்ளார். பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


