கோவையில் கோர விபத்து: தண்ணீர் லாரியில் கார் மோதி இருவர் பலி; 7 பேர் கவலைக்கிடம்!

கோவை: கோவையில் தண்ணீர் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த கதிரேசன் (வயது 45) என்பவர் தனது குடும்பத்தினருடன் நேற்று பண்ணாரியம்மன் கோயிலுக்குச் சென்றார். அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு கோவை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்.

அவர்களது கார் சத்தி சாலையில் அன்னூர் அருகே வந்துகொண்டிருந்த போது எதிரே வந்த தண்ணீர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் கார் உருக்குலைந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். மேலும், அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Advertisement

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கதிரேசன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 7 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கதிரேசன், வேல்முருகன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தண்ணீர் லாரி ஓட்டுநர் வேல்ராஜ் படுகாயமடைந்த நிலையில் அவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

Advertisement

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

1 COMMENT

Comments are closed.

Recent News

இந்த அரசு கருணை காட்டாது- அமைச்சர் அருண்ராஜ் குறிபிட்ட விஷயம்…

கோவை: உறுப்பு மாற்று சிகிச்சையில் தவறு செய்தால் இந்த அரசு கருணை காட்டாது என நாமக்கல் கிட்னி திருட்டை குறிபிட்டு அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...