கோவையில் Maruti Suzuki Victoris காருக்கு ரூ.1.5 லட்சம் சலுகை..!

கோவை: அம்பாள் ஆட்டோஸ் நிறுவனத்தில் Maruti Suzuki Victoris காருக்கு ரூ.1.5 லட்சம் வரை சிறப்பு சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki நிறுவனத்தின் எஸ்யூவி காரான “Victoris” முதன்முறையாக 2025ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த கார், பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா மாடல்களுக்கு இடையில் அமைந்த பிரீமியம் எஸ்யூவி ஆகும். இளம் தலைமுறையை குறிவைத்து, நவீன டெக்னாலஜி, ADAS பாதுகாப்பு வசதி, ஹைபிரிட் மற்றும் CNG உள்ளிட்ட பல்வேறு பவர்டிரெயின் தேர்வுகளுடன் Victoris அறிமுகமானது.

இதனிடையே, கோவையில் செயல்பட்டு வரும் அம்பாள் ஆட்டோஸ் நிறுவனத்தில், 2025 தயாரிப்பான Victoris கார்களுக்கு மாருதி நிறுவனம் வழங்கும் ஆஃபர்களுடன் கூடுதலாக ரூ.1.5 லட்சம் வரை சலுகை வழங்கப்பட உள்ளது.

Advertisement

இதுகுறித்து அம்பாள் ஆட்டோஸ் பொது மேலாளர் ராஜேஷ் ஜெயராமன் கூறுகையில், “Maruti Suzuki Victoris மாடல் கார்களுக்கு எங்கள் ஷோரூமில் தற்போது சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்த விலையில் ரூ.1.5 லட்சம் வரை சலுகை தரும் இந்த ஆஃபர் இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கும்.

Maruti Suzuki Victoris offer

மேலும், மாருதி சுசுகி வாகனங்களின் விலை ஜூன் மாதம் முதல் உயர வாய்ப்பு உள்ளதால், வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.

சந்தையில் Maruti Suzuki Victoris கார் ரூ.15 லட்சம் முதல் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.