கோவையில் ஒரே இடத்தில் 108 பசுக்களை கொண்டு கோமாதா பூஜை…

கோவை: கோவையில் ஒரே இடத்தில் 108 பசுக்களை கொண்டு கோமாதா பூஜை நடைபெற்றது.

Advertisement

நமாமி கோமாதரம் எனும் கோமாதா பூஜை இராமநாதபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த பூஜையில் 108 பசுமாடுகள், கன்றுகுட்டிகள் அழைத்து வரப்பட்டு ஹோமங்கள் வளர்த்து பூஜை மேற்கொள்ளப்பட்டது.

விஸ்வ மங்களம், சமூகம் மற்றும் தேச நலனை மையமாக கொண்டு நடைபெற்ற இந்த கோமாதா பூஜையில் சிவாச்சாரியார்கள், காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், குருமார்கள், ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு அவரவர்கள் குடும்பத்திற்காக வேண்டிக்கொண்டனர்.

இதில் பொதுமக்கள் அனைவரும் பசுக்களுக்கும் கன்றுகுட்டிகளுக்கும் வாழைப்பழம், புண்ணாக்கு, அகத்திக்கீரை ஆகியவற்றை கொடுத்து வணங்கினர். மேலும் இதில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...