ஒரு வாரத்தில் நகையை மீட்டுத் தருவதாகக் கூறி ஏமாற்றம் – கோவையில் புகார்!

கோவை : கடன் வாங்கி ஒரு வாரத்தில் நகையை மீட்டுத் தருவதாகக் கூறி, 6 பவுன் தங்க நகையைப் பெற்றுக்கொண்டு திருப்பித் தராமல் மோசடி செய்ததாக பெண் ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கோவை இருகூர் ஏ.ஜி. புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மனைவி விஜயா (33). அதே பகுதியைச் சேர்ந்தவர் கோகிலாமணி. இவர், தனக்குப் பணம் தேவைப்படுவதாக விஜயாவிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரிடம் தங்க நகைகளைப் பெற்றுக்கொண்டு கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்குவதாகவும், ஒரு வாரத்திற்குள் பணத்தை ஏற்பாடு செய்து நகைகளை மீட்டுத் திருப்பிக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

இதை நம்பிய விஜயா, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது 6 பவுன் தங்க நகைகளை கோகிலாமணியிடம் கொடுத்துள்ளார்.

Advertisement

ஆனால், நகைகளைப் பெற்றுக்கொண்ட கோகிலாமணி, பல மாதங்கள் கடந்தும் அவற்றை மீட்டுத் திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த விஜயா, இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், கோகிலாமணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கூகுள் மேப் ரிவ்யூ செய்தால் பணம் எனக் கூறி மோசடி – கோவையில் வாலிபர் ஏமாற்றம்

கூகுள் மேப்பில் ரிவ்யூ பதிவிட்டால் பணம் வழங்கப்படும் எனக் கூறி, கோவையைச் சேர்ந்த வாலிபரிடம் ரூ.67,995 மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video

கோவையில் அடேங்கப்பா திருட்டு- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வண்டி சீட்டுக்கு அடியில் தேங்காய்களை திருடி சென்ற வியாபாரிகள். கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக வந்த வியாபாரிகள், தங்களது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியிலும் கொண்டு...