இஸ்ரோ புறப்பட்ட கோவை அரசு பள்ளி மாணவர்கள்…

கோவை: கோவை அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச இஸ்ரோ கல்விச் சுற்றுலா சென்றுள்ளனர்.

Advertisement

கோவை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இலவச இஸ்ரோ கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. இச்சுற்றுலாவில் 55 அரசு பள்ளி மாணவர்கள் தங்களது வழிகாட்டி ஆசிரியர்களுடன் பங்கேற்றனர்.

இந்நிகழ்வை கோவை மண்டல அறிவியல் மையத்தின் புதுமைகாண் மைய வழிகாட்டி ஆசிரியர் பேராசிரியர் லெனின் பாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இங்கிருந்து பேருந்து மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டனர். இந்நிகழ்விற்கு கோவை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

மாணவர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (VSSC) ஒரு பகுதியாக இயங்கி வரும் தும்பா நிலநடுக்கோட்டு ஏவூர்தி ஏவுதளத்தை (Thumba Equatorial Rocket Launching Station – TERLS) பார்வையிட உள்ளனர். இது இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதளமாகும் என்பதால் இந்திய விண்வெளி வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.

Advertisement

இஸ்ரோவின் ஆரம்பகால விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றை நினைவுகூரும் வகையில், அப்பகுதியில் இருந்த பழமையான தேவாலயம் தற்போதுTERLS Space Museum (விண்வெளி அருங்காட்சியகம்) ஆக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் வளர்ச்சிப் பயணத்தை அறிந்துகொள்ள உள்ளனர்.

மேலும், இஸ்ரோ விஞ்ஞானியும் எழுத்தாளருமான சசிகுமார் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விண்வெளி ஆராய்ச்சி, ராக்கெட் தொழில்நுட்பம், விஞ்ஞானியாக உருவாகும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

Advertisement

இப்பயணத்தின் சிறப்பு அம்சமாக, இஸ்ரோவின் வளிமண்டல ஆய்வு ஏவூர்திகளில் ஒன்றான RH-200 Sounding Rocket தும்பா ஏவுதளத்திலிருந்து ஏவப்படுவதை மாணவர்கள் நேரில் கண்டு மகிழ உள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்தர அறிவியல் அனுபவங்களை வழங்கும் நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர்ந்து பல்வேறு அறிவியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.