கோவையில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் இளைஞர்களுக்கு இலவச கணினி பயிற்சி

கோவை: ஆதிதிராவிடர் பழங்குடியினர் இளைஞர்களுக்கு இலவச கணினி பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்காக இலவச Computer-Aided Design (CAD), Computer-Aided Manufacturing (CAM) Course and Industrial Automation Course போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

Advertisement

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள்வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தாட்கோ, மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் , Computer-Aided Design (CAD), Computer-Aided Manufacturing (CAM) Course and Industrial Automation (Course) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது

இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்மின்மற்றும் மின்னணுவியல் இன்ஜினியரிங் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றவராகவும் வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள்ளும்மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 90 நாட்கள் மேலும் பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் பயிற்சி நடைபெற உள்ளது.

தகுதி பெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டங்களில் தங்கி படிப்பதாற்கான செலவினத்தொகை தாட்கோவால் ஏற்கப்படும். இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்பும் அந்நிறுவனத்தின் மூலமாக ஆரம்பகால மாத ஊதியமாக சுமார் ரூ.25000/- முதல் ரூ.40,000/- வரையும் வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் ஆட்சித்தலைவர் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...