கோவை மாவட்டத்தில் 400 ஏக்கரில் பசுந்தீவனப் பயிர் சாகுபடி திட்டம் – கால்நடை வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம்!

கோவை: கோவை மாவட்டத்தில் கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், 2026–2027-ம் நிதியாண்டில் 400 ஏக்கர் பரப்பளவில் பசுந்தீவனப் பயிர் சாகுபடி செய்யும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.

கால்நடை வளர்ப்போரின் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், கால்நடைகளின் உடல் நலம் மற்றும் பால் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Advertisement

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கோ விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும். மேலும், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருப்பதுடன், குறைந்தபட்சம் 0.25 ஏக்கர் நிலத்தில் பசுந்தீவனப் பயிர் சாகுபடி செய்து, தொடர்ந்து 3 ஆண்டுகள் பராமரிக்கத் தயாராக இருக்க வேண்டும். குத்தகை நிலத்தில் சாகுபடி செய்பவர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கான குத்தகை ஒப்பந்தம் வைத்திருக்க வேண்டும்.

பாசன வசதியுடன் கூடிய நிலத்தில் அதிக எண்ணிக்கையிலான கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக ஒரு அலகு என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 30 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும்.

Advertisement

விண்ணப்பிக்க விரும்புவோர் பெயர், முகவரி, ஆதார் அட்டை, கைப்பேசி எண், குடும்ப அட்டை, நில ஆவணங்கள், கால்நடை விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் 3 ஆண்டுகள் பசுந்தீவனப் பயிர்களைப் பராமரிப்பதற்கான உறுதிமொழிப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே, தகுதியுள்ள விவசாயிகள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருந்தகங்களை அணுகி, இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கார்த்திகையும்… ஐயப்ப விரதமும்… பத்கர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது ஏன்?

கோவை: கார்த்திகை 1ம் தேதி பிறந்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருப்பது ஏன்? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தமிழ் மாதங்களில் மிகவும்...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...