எனக்கும் வழக்கிற்கும் சம்பந்தமில்லை- சூலூர் சிறுமி வழக்கில் A2 கூச்சல்…

கோவை: சூலூர் சிறுமி வழக்கில் கைதான இரண்வாடது குற்றவாளி எனக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை என கூச்சலிட்டார்.

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் A2 குற்றவாளி மோகன் நீதிமன்றத்தில் கூச்சலிட்டு எனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என ஆவேசம் கொண்டார்.

Advertisement

கோவை மாவட்டம் சூலூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. இந்த வழக்கின் முதல் குற்றவாளியான கார்த்தி மதுரை சிறையிலும், இரண்டாவது குற்றவாளியான மோகன் திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, மதுரை சிறையில் இருந்து கார்த்தி பலத்த பாதுகாப்புடன் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு காலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வழக்கின் தீர்ப்பை நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி ஹரிஹரன் தெரிவித்தார்.

Advertisement

இதற்கிடையில், திருச்சி சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட இரண்டாவது குற்றவாளி மோகன், மதியத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் காவல் வாகனத்தில் இருந்து இறங்கி உள்ளே சென்றபோது, அங்கிருந்த செய்தியாளர்களைப் பார்த்து, “என்னைப் படம் எடுக்காதீர்கள். எனக்கும் இந்த வழக்குக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. என் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்” எனக் கூச்சலிட்டார்.

இந்த வழக்கில் இரு குற்றவாளிகளுக்கும் நவம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கார்த்திகையும்… ஐயப்ப விரதமும்… பத்கர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது ஏன்?

கோவை: கார்த்திகை 1ம் தேதி பிறந்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருப்பது ஏன்? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தமிழ் மாதங்களில் மிகவும்...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...