நான் நடிக்க வேண்டிய படத்தில் தனுஷ் நடித்து ஹிட்.. புலம்பும் பிரபல நடிகர்!

நான் நடிக்க வேண்டிய படத்தில் தனுஷ் நடித்து, அந்த படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனதாக பிரபல நடிகர் புலம்பி தீர்த்துள்ளார்.

Advertisement

கால்ஷீட் பிரச்சனையால் சில சூப்பர் ஹிட் படங்களை பிரபலங்கள் தவற விடுவது வாடிக்கையான விஷயமாக மாறிவிட்டது.

அப்படி கதை தேர்வு செய்ய தெரியாத பிரபலங்கள் ஒரு சில படங்களோடு மார்க்கெட்டை இழந்து வருகின்றனர். அப்படி எத்தனையோ நடிகர்கள் நடிகைகள் உண்டு.

அதில் முக்கியமான நல்ல திறமையுள்ள நடிகர்தான் பரத். பாய்ஸ் படம் மூலம் ப்ளே பாயாக நடித்த பரத், பின்னர் காதல், வெயில், எம் மகன் மூலம் நல்ல கதையை தேர்வு செய்து பிரபலமானார்.

Advertisement
Boyz Bharath

தனி ரசிகர்கள் வட்டம் அவருக்கு கூடியது. காதல் படங்களை தேர்வு செய்த பின் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்தார். ஆனால் அவருக்கு அது கைக்கூடவில்லை.

நல்ல கதையம்சமான நேபாளி படத்தில் அவர் நடிப்பு பாராட்டப்பட்டாலும், படம் வியாபார ரீதியாக தோல்வியை தழுவியது.

Advertisement

தொடர்ந்து இவர் நடித்த படங்கள் எல்லாம் பெரிய வரவேற்பு இல்லை. ஆனால் கிடைத்த வாய்ப்பை பிடித்து, நடித்துக் கொண்டே இருந்த அவருக்கு கடைசியாக 2019ஆம் ஆண்டு நடித்த காளிதாஸ் படம் கைக்கொடுத்தது.

Bharath Miss Dhanush movie

கொரோனா காலக்கட்டத்துக்கு பின்னர் நடிகர் பரத் ஏராளமான படங்களில் நடித்தார். ஆனால் அந்த படம் எப்போது வந்தது என கூட பார்வையாளர்களுக்கு தெரியாமல் போனது.

இந்த நிலையில் காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

Kaalidaas

இந்த படம் குறித்த பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பரத், தான் பல படங்களை மிஸ் செய்து விட்டதாகவும், இப்ப வந்தவர்கள் எல்லாம் எதுவுமே செய்யாமல் முன்னணி நடிகர்களாக உயர்ந்துவிட்டனர். ஆனால் நீங்கள் மெனக்கெட்டு நடித்தும், முன்னணி இடத்தை பிடிக்கவில்லை என வருத்தத்துடன் சிலர் என்னிடம் கூறுகின்றனர்.

நானும் சில தவறுகளை செய்துவிட்டேன், எனக்கு வந்த படங்களை கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனது என கூறிய பரத், தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம் படத்தை நான் தான் செய்ய வேண்டியது.

Bharath Miss Thiruvilayadal

அந்த படத்தின் இயக்குநர் பூபதி பாண்டியன் கதையை என்னிடம் கூறும் போது, நான் சொல்கிறேன் என கூறியிருந்தேன், அதற்குள் அவர் தனுஷிடம் சென்று, அந்த கதையை ஓகே செய்து படத்தையே ஆரம்பித்துவிட்டார்.

அது போல காதல் படம் முதலில் தனுஷ்க்குத்தான் போனது. அவர் நடிக்க முடியாமல் போனதால் அந்த படத்தில் நான் நடித்தேன் என கூறினார்.

Amazon Link 3
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...