மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்தேன்; சிங்காநல்லூரில் தவெக வேட்பாளர் பேட்டி

கோவை: கோவை சிங்காநல்லூரில் தவெக வேட்பாளர் கே.எஸ்.ஶ்ரீ கிரி பிரசாத் வேட்புமனு தாக்கல் செய்து, மக்கள் பணிக்காக அரசியல் களத்தில் இறங்கியுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் கே.எஸ்.ஶ்ரீ கிரி பிரசாத், தனது வேட்புமனுவை கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

Click here to read news: நான் நடிக்க வேண்டிய படத்தில் தனுஷ் நடித்து ஹிட்.. புலம்பும் பிரபல நடிகர்!

வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக, கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை பகுதியில் இருந்து செண்டை மேளம் முழங்கவும், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் ஆதரவாளர்கள் ஊர்வலமாகவும் வந்தனர். இந்த ஊர்வலம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

Advertisement

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.ஶ்ரீ கிரி பிரசாத், வழக்கறிஞராக இருந்து மக்கள் பணி செய்துவந்த நிலையில், தற்போது அரசியல் களத்தில் நேரடியாக இறங்கி மக்களுக்கு சேவை செய்ய தவெக வாய்ப்பு வழங்கியுள்ளதாக கூறினார்.

Click here to read news: கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி!

Advertisement

சிங்காநல்லூர் தொகுதியில் அடிப்படை வசதிகள் பல இன்னும் முழுமையாக மக்களுக்கு சென்றடையவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். இந்தத் தேர்தலில் தவெக மற்றும் திமுகவுக்கிடையே நேரடி போட்டி நிலவும் என்றும் தெரிவித்தார்.

மேலும், இளைஞர்களின் எழுச்சியால் தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக வருவது உறுதி என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.



Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ரசிகன் என்பதே முதல் அடையாளம்- ஜனநாயகனுக்கு வந்த அமைச்சர் சம்பத்குமார் பேட்டி…

கோவை: ரசிகன் என்பதே முதல் அடையாளம் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கோவை திரையரங்கில் டிஜே நிகழ்ச்சியுடன் ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் அமைச்சர் சம்பத்குமார் திரைப்படத்தை காண்பதற்கு வருகை புரிந்தார். இயக்குனர் வினோத்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...