கோவை: கோவையில் சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கோவையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினரின் நிகழ்ச்சிகள் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் என சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நாட்டின் 80வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அனைவரும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வ உ சி மைதானத்தில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்மை நிற புறாக்களை பறக்கவிட்டார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக வாகா எல்லையில் நடைபெறும் அனைவருக்கும் போலவே இங்கும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பல்வேறு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக கோவை மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 106 பேருக்கும் 74 அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் 222 பேருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.

இந்த முறை கூடுதல் சிறப்பாக கோவை மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் தற்பொழுது உள்ள நவீன வசதிகள் குறித்தும் பெண்களின் பாதுகாப்பு தற்காப்புகள் குறித்தும் செய்முறை விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.





