இஸ்ரோ நோக்கிப் புறப்பட்ட கோவை அரசுப் பள்ளி மாணவர்கள்!

கோவை: கோவை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இஸ்ரோ கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. இச்சுற்றுலாவில் 55 அரசு பள்ளி மாணவர்கள் தங்களது வழிகாட்டி ஆசிரியர்களுடன் பங்கேற்றனர்.

இந்நிகழ்வை ஜூன் 16 அன்று கோவை மண்டல அறிவியல் மையத்தின் புதுமைகாண் மைய வழிகாட்டி ஆசிரியர் பேராசிரியர் லெனின் பாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்கள் மாலை 6.00 மணியளவில் பேருந்து மூலம் திருவனந்தபுரம் நோக்கிப் புறப்பட்டனர்.

Advertisement

இந்நிகழ்விற்கு கோவை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் மணி மற்றும் மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தனர்.

மாணவர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (VSSC) ஒரு பகுதியாக இயங்கி வரும் தும்பா நிலநடுக்கோட்டு ஏவூர்தி ஏவுதளத்தை (Thumba Equatorial Rocket Launching Station – TERLS) பார்வையிட உள்ளனர். இது இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதளமாகும் என்பதால் இந்திய விண்வெளி வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.

இஸ்ரோவின் ஆரம்பகால விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றை நினைவுகூரும் வகையில், அப்பகுதியில் இருந்த பழமையான தேவாலயம் தற்போதுTERLS Space Museum (விண்வெளி அருங்காட்சியகம்) ஆக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் வளர்ச்சிப் பயணத்தை அறிந்துகொள்ள உள்ளனர்.

மேலும், இஸ்ரோ விஞ்ஞானியும் எழுத்தாளருமான சசிகுமார் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விண்வெளி ஆராய்ச்சி, ராக்கெட் தொழில்நுட்பம், விஞ்ஞானியாக உருவாகும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

இப்பயணத்தின் சிறப்பு அம்சமாக, இஸ்ரோவின் வளிமண்டல ஆய்வு ஏவூர்திகளில் ஒன்றான RH-200 Sounding Rocket 17.06.2026 அன்று காலை 11.45 மணிக்கு தும்பா ஏவுதளத்திலிருந்து ஏவப்படுவதை மாணவர்கள் நேரில் கண்டு மகிழ உள்ளனர். இந்த அனுபவம் மாணவர்களிடையே விண்வெளி அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்தர அறிவியல் அனுபவங்களை வழங்கும் நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர்ந்து பல்வேறு அறிவியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...