கோவை: பாட்டலுக்கு 10 ரூபாய் வாங்குவது பல இடங்களில் குறைந்து 3,5 ரூபாய் மட்டும் வாங்குவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது என மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மருத்துவர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விக்னேஷ்
போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதற்கான பல கட்ட முயற்சிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
ஒரு மாதமாக காவல்துறையினர் போதைப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்
கடந்த 10.5.26 முதல் 20.7.26 வரை 2892 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3845 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,
3579 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார் . அதுமட்டுமின்றி 27 கிலோ பிற போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுஎனவும், போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஹெராயின், மெத்தபெட்டமைன்,எம்டிஎம்ஏ, கஞ்சா சாக்லேட் என பல போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும், அரசு சமரசமும் இன்றி போதை இல்லா தமிழகம் உருவாக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் பத்து ரூபாய் வாங்கியது இன்னும் தொடர்வது குறித்தான கேள்விக்கு இப்பொழுது பல இடங்களில் பாட்டிலுக்கு பணம் வாங்கு குறைந்து இருக்கின்றது எனவும், இப்போது 5 ரூபாய், 3 ரூபாய் என வாங்குவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது எனவும் அதை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம்
இந்த விவகாரத்தில் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்கள், 27ம் தேதிக்கு பின்பு வேறு ஒரு நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என தெரிவித்தார். இந்த துறையை மாற்ற கலந்துரையாடல் நடந்தது ,அதில் பேசப்பட்ட ரெஸ்ட்ரோ பாரை மட்டும் யாரோ சொல்லி இருக்கின்றனர் என தெரிவித்தார்.
பெட்ரோ பேக் மூலம் மது விற்பனை கொண்டுவர ஏற்கனவே முயன்ற பொழுது ஃப்ரூட்டி பாக்ஸ் போல கவர்ச்சியாக இருப்பதால் குழந்தைகளுக்கு அதன் மீது ஆர்வம் வரும் என்றார்கள். இப்போது அதற்கு மாற்று வழியைக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.
கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் சீக்கிரம் வேலை முடிந்துவிடும் , விரைவில் நடைமுறைக்கு வரப்போகிறது என தெரிவித்த அவர், குப்பை கிடங்கு பிரச்சினையும் அடுத்த ஆண்டுக்கு சரி செய்யப்படும் என தெரிவித்தார்.





