கோவை: ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு கோவையில் பிரம்மாண்ட கட் அவுட்கள் வைத்த தமிழக வெற்றி கழக்கத்தினர்.
இயக்குநர் வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வரின் நடிகருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்தத் திரைப்படம் சட்டவிரோதமாக ஏற்கனவே இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து பல கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு இறுதியாக தற்பொழுது நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இது விஜய் ரசிகர்கள் மத்தியிலும் குறிப்பாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் நடிப்பில் இறுதி திரைப்படம் ஜனநாயகன் தான் என்று கூறப்படும் நிலையில் இந்த திரைப்படத்தை விமர்சையாக கொண்டாடுவதற்கு தமிழக வெற்றி கழகத்தினர் முடிவெடுத்துள்ள நிலையில் பல்வேறு திரையரங்குகளிலும் பிரம்மாண்ட கட் அவுட்டுகள் வைக்கும் பணிகளை அவர்கள் துவக்கி உள்ளனர். அதன்படி ரயில் நிலையம் அருகில் உள்ள சாந்தி திரையரங்கம் முகப்பில் பிரம்மாண்ட கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
அந்த கட்டவுட்டுகளில் தமிழக முதல்வர் விஜய் அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் சம்பத்குமார் ஆகியோரின் புகைப்படங்களும் பெரிய அளவில் இடம்பெற்றுள்ளது.




