முதியவர்களே கவனம்; கோவையில் பட்டப்பகலில் அதிர்ச்சி!

கோவை: கோவையில் பட்டப்பகலில் 103 வயது மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவுண்டம்பாளையம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் ராஜகோபால் (60). இவரது வீட்டில் நேற்று அனைவரும் வெளியே சென்று இருந்தனர்.

Advertisement

அவரது 103 வயது தாயார் மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது 4 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க நகையை கழற்றி தப்பி சென்றார்.

சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய ராஜகோபாலிடம், அவரது தாயார் மர்ம நபர் வீடு புகுந்து நகை திருடி சென்றதை கூறினார்.

Advertisement

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜகோபால் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 103 வயது மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

கோவையில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஏடிஜிபி ஆலோசனை

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

முருக பக்தர்கள் விரும்பும் கந்த சஷ்டி விரதம்… அடுத்த நாட்களுக்கு இதை மறந்திடாதீங்க…!!

கோவை: கந்த சஷ்டி விரதத்தை முருகப் பக்தர்கள் இன்று முதல் துவங்கியுள்ள நிலையில், இந்த 6 நாட்களுக்கு அவர்கள் செய்ய வேண்டிய பூஜை முறைகள், விரத முறைகள் பற்றி காணலாம். சஷ்டி விரதம் வாழ்க்கையில் இருக்கும்...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...