கழகங்கள் மறையட்டும்- கோவையில் அண்ணாமலைக்கு போஸ்டர் ஒட்டிய ரஜினி ரசிகர்கள்…

கோவை: கழகங்கள் மறையட்டும் என குறிபிட்டு ரஜினி ரசிகர்கள் அண்ணாமலைக்கு போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.

Advertisement

கழகங்கள் மறையட்டும் இனி நம்ம கொடி பறக்கட்டும் என குறிப்பிட்ட கோவையில் ரஜினி ரசிகர்கள் அண்ணாமலைக்கு போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புதிய கட்சி துவங்க உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகும் நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அவரது ஆதரவாளர்கள் ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் அது தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அண்ணாமலையின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் நற்பணி மன்றம் சார்பில் மீண்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Advertisement

அந்த போஸ்டரில் கழகங்கள் மறையட்டும் இனி நம்ம கொடி பறக்கட்டும் weCoMe அண்ணாமலை என குறிப்பிட்டு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அண்ணாமலை திரவரது புகைப்படங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கழகங்கள் மறையட்டும் என்று தற்பொழுது உள்ள பல்வேறு அரசியல் கட்சி கழகங்களான திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றை மறைமுகமாக சாடியுள்ளனர்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...