கோவை: கோடை விடுமுறை முடிந்து உற்சாகத்துடன் குழந்தைகள் பள்ளிகளுக்கு வருகை புரிந்தனர்.
கோடை விடுமுறை முடிந்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறப்பை தொடர்ந்து காலை முதலே குழந்தைகள் மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வருகை புரிந்தனர்.
அனைத்து பெற்றோர்களும் அவர்களது குழந்தைகளை வகுப்பறை வரை அழைத்து வந்து விட்டுச் சென்றனர். கோவையில் பல்வேறு பள்ளிகளில் குழந்தைகளை வரவேற்கும் விதமாக வண்ண வண்ண பொம்மைகள் பதாகைகளுடன் நுழைவாயில்களை பள்ளி நிர்வாகத்தினர் அலங்கரித்திருந்தனர்.
மேலும் பள்ளி வளாகங்கள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு ஆங்காங்கே குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் அவர்களது நண்பர்களை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். சில குழந்தைகள் அழுது கொண்டு வந்ததும் பார்ப்பதற்கு வெகுலியாக அமைந்தது.
பள்ளிகளில் குறிப்பிட்ட இடைவெளியில் அனைவரும் குடிநீர் பருகுவதை உறுதி செய்யும் வண்ணமும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


