கோவையில் பாலியல் சீண்டலுக்கு உள்ளான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்- எம்எல்ஏ செய்த செயல்…

கோவை: பாலியல் சீண்டலுக்கு ஆளான மனநலம் பாதித்த பெண்ணை மனநல காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்ட
கவுண்டம்பாளையம் தவெக MLA கனிமொழி சந்தோஷ்.

Advertisement

கடந்த வாரம் கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி அங்கிருந்த நாய்களால் காப்பற்றப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குறித்த தகவல் அறிந்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் அப்பெண்ணின் உறவினர்களை கண்டுபிடித்து அவர்களின் அனுமதியுடன் காரமடை பகுதியில் செயல்பட்டு வரும் மனநல காப்பகத்தில் பராமரிப்பு மற்றும் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

அங்கு இவரைப் போலவே மனநலம் பாதிக்கப்பட்ட அவரது தம்பி அக்காவை பிரிய மனமில்லாமல் அழுதபடியே பாசப்போராட்டம் நடத்தியது காண்போர் மனதை கனக்கவைத்தது.

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் என் ஜி ஜி ஓ காலனி பகுதியில் நள்ளிரவு 2 மணியளவில் 17 வயது மதிக்கத்தக்க போதை இளைஞர் தனியாக சாலையில் அமர்ந்திருந்த அதேபகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றார்.

Advertisement

அப்போது அருகில் இருந்த நாய்கள் அவனை கடித்து விரட்டியடித்து அப்பெண்ணை காப்பாற்றியது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில் இச்சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க சிறுவனை கைது செய்த துடியலூர் போலீசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து அறிந்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் உடனடியாக அப்பெண்ணின் உறவினர்களை கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைக்கும் முயற்சி மேற்கொண்டார்.

Advertisement

ஆனால் ஏற்கனவே இப்பெண்ணை போலவே அவரது தம்பியும் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் பராமரிக்க முடியாமல் அவரது தாய் சிரமப்பட்டுக் கொண்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தமிழக வெற்றிக் கழக பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளர் நித்தின் உதவியும் காரமடையில் செயல்பட்டு வரும் அன்பு மலர் மனநல காப்பகத்தில் சேர்த்து பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.

அப்போது இவரைப் போலவே மனநலம் பாதிக்கப்பட்ட அவரது தம்பி அக்காவை பிரிய மனமில்லாமல் அழுதபடியே பாசப்போராட்டம் நடத்தியது காண்போர் மனதை கனக்கவைத்தது.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...