கோவையில் சமூகநீதி விடுதிகளில் அமைச்சர் திடீர் ஆய்வு…

கோவை: அன்னூர் அருகே சமூகநீதி விடுதிகளில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார்.

Advertisement

கோயமுத்தூர் மாவட்டம் அன்னூர் வட்டம், சொக்காம்பாளையத்தில் செயல்பட்டு வரும் சமூகநீதி விடுதிகளில் இரவு திடீரென பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் விஸ்வநாதன் உள்ளிட்ட துறைச்சார்ந்த பலர் உடனிருந்தனர்.

இந்த ஆய்வில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பிற்பட்டோர் நலத்துறைக்கு சொந்தமான மாணவர் மற்றும் மாணவியர் சமூக நீதி விடுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு தங்கியுள்ள மாணவ மாணவியர்களிடம் தங்களது குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கு மாணவ, மாணவியர்களுக்காக சமைக்கப்படும் உணவின் தரத்தை உட்கொண்டு, ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

மேலும், மாணாக்கர் வருகை பதிவேடு, சமையலறையில் பொருட்கள் இருப்பு மற்றும் தரம் குறித்தும், சமையலறையின் சுற்றுப்புற சுகாதாரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, மாணாக்கர்கள் பயன்படுத்தும் கழிப்பறை, குளியலறை அதனுடைய சுகாதாரம் குறித்தும் விடுதி காப்பாளர்களிடம் கேட்டறிந்து, பெற்றோர் ஒருபுறம்நீங்கள் ஒருபுறம் இருந்தாலும், நன்கு கல்வி பயின்று பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்திட வேண்டும் என மாணவர்களுக்கு, அறிவுறுத்தினார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...