ஓடும் ரயிலில் மாணவிக்கு தொல்லை- கோவை காவலர் கைது…

கோவை: ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவையை சேர்ந்த காவலர் கைது செய்யப்பட்டார்.

சட்டக் கல்லூரியில் படித்து வரும் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் விடுமுறையை முன்னிட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு வந்து கொண்டு இருந்தார்.

Advertisement

அப்பொழுது ரயில் காட்பாடி அருகே வந்து கொண்டு இருந்த போது மாணவியின் இருக்கைக்கு அருகே இருந்த ஒரு நபர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அந்த மாணவி எச்சரித்தும் தொடர்ந்து தொல்லை செய்து உள்ளார்.

அந்த மாணவி தனது செல்போனில் வீடியோ எடுத்து சக பயணிகளிடம் காட்டி கூறினார். உடனே அவர்கள் அந்த நபரிடம் விசாரித்த போது அவர் கோவை ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் தலைமை காவலர் சேக் அப்துல்லா என்பதும் அவர் அலுவலக விஷயமாக சென்று விட்டு ரயிலில் வந்ததும் தெரிய வந்தது. இதற்கு இடையே அதிகாலையில் ரயிலில் கோவைக்கு வந்ததும் ஷேக் அப்துல்லா ரயிலில் இருந்து இறங்கி சென்று விட்டார்.

பாதிக்கப்பட்ட மாணவி கோவை ரயில் போலீசில் புகார் அளித்தார். ஆனால் சம்பவம் நடந்த இடம் அரக்கோணம் ரயில்வே எல்லைக்கு உட்பட்டது என்பதால் அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி தலைமை காவலர் சேக் அப்துல்லா மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

அவர் தன்னை கைது செய்யாமல் இருக்க ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சேர்க்க அப்துல்லாவை கோவை ரயில் நிலைய அருகே போலீசார் கைது செய்து அரக்கோணம் அழைத்துச் சென்றனர்.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

அதிமுகவை நடத்த எஸ்.பி.வேலுமணியே தகுதியானவர்- புகழேந்தி தெரிவிப்பு…

கோவை: அதிமுகவை நடத்த எஸ் பி வேலுமணி தகுதியானவர் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் ஹோட்டலில் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் முதல்வர் தளபதி முன்னிலையில் தமிழக வெற்றி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...