கோவையில் ஜனநாயகன் படம் பார்த்த அமைச்சர்கள் அழுகை! – VIDEO

கோவை: கோவையில் விஜய்யின் ஜனநாயகன் படம் பார்த்த அமைச்சர்கள் சம்பத்குமார் மற்றும் விக்னேஷ் கண்ணீர் வடித்த வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் நீண்ட காத்திருப்பிற்குப் பின் இன்று வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சர்கள் பலரும் ஜனநாயகன் படம் பார்த்து தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, கோவை கங்கா தியேட்டரில் அமைச்சர் சம்பத்குமாரும், போத்தனூர் அரசன் தியேட்டரில் அமைச்சர் விக்னேஷ்குமாரும் படம் பார்க்கச் சென்றனர்.

Advertisement

முன்னதாக அமைச்சர் விக்னேஷ் சென்ற தியேட்டரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கெடுபிடி காட்டப்பட்டது. வாயிலுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Also Read: கோவையில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்! இதெல்லாம் ஒரு பொழப்பா… நெட்டிசன்கள் விளாசல்…

Advertisement

விக்னேஷ் விசிலடித்து படம் பார்க்க காவல்துறையைப் பயன்படுத்துவதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், திரையரங்கிற்கு வந்த அவர் அரசு வாகனத்தைப் பயன்படுத்தி வந்ததும், காரில் தேசியக் கொடி கட்டியபடி தியேட்டருக்குள் வந்து நிறுத்திவிட்டு படம் பார்த்ததும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, முதலமைச்சர் விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படத்தைப் பார்த்த அமைச்சர்கள், தியேட்டருக்குள்ளேயே அமர்ந்து அழுதனர்.

தங்களது தலைவரை கடைசியாக திரையரங்கில் பார்க்கிறோம் என்பதை உணர்ந்து இருவரும் கண்கள் கலங்கிய அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் முடியும் தருவாயில் 24மணி நேர குடிநீர் திட்டம்- பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்…

கோவை: 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளதாகவும் கூடுதல் பணிகளை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...