கோவை: காந்தியடிகள் பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாள்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வழங்கினார்.
மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாள் மற்றும் கர்ம வீரர் காமராஜர் நினைவு நளை ஒட்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள காந்தியடிகள் மற்றும் காமராஜர் திரு உருவச்சிலைகளுக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் மாலைகள் அணிவித்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு ஊன்று கோல், காது கேட்கும் கருவி மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து காலணி, கையுறை, முககவசம், ரிப்லக்டர் உடை உள்ளிட்டவைகளை வழங்கினார். மேலும் நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார்.
இந்திய தேசத் தந்தை அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 157 வது பிறந்தநாளை நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழாவாக கொண்டாடி வருகின்றனர். மேலும் தமிழக முன்னாள் முதல்வர் கல்விக் கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் 51 வது நினைவு நாளை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் அறிவுறுத்தலின்படி, பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி நித்தின் வழிகாட்டுதலின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் சம்பத்குமார் தலைமையில் மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாள் மற்றும் கர்ம வீரர் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள காந்தியடிகள் மற்றும் காமராஜர் திரு உருவச்சிலைகளுக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் மாலைகள் அணிவித்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு ஊன்று கோல், காது கேட்கும் கருவி மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்கள் சேவையை போற்றும் விதமாக சால்வை அணிவித்தும், அவர்கள் பாதுகாப்பாக பணிசெய்ய காலணி, கையுறை, முககவசம், ரிப்லக்டர் உடை உள்ளிட்டவைகளை வழங்கினார். மேலும் நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார்.





