பருவமழை முன்னெச்சரிக்கை- கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு…

கோவை: கோவை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisement

தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி, கோவை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன.

Advertisement

இதன் ஒரு பகுதியாக, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், பன்னிமடை ஊராட்சி, சோமையம்பாளையம் ஊராட்சி, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைக்கால முன்னெச்சரிக்கைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

மழைநீர் செல்லும் பாதைகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் அடைப்புகள் ஏற்படாமல் கண்காணிக்கவும், மழைநீர் தடையின்றி வெளியேறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

Advertisement

இந்த ஆய்வின்போது கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அன்பழகன் உள்ளிட்ட வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு- கோவை மாநகராட்சி நிர்வாகம்…

கோவை: வடகிழக்கு பருவமழையையொட்டி மழைநீர் தேக்கம், மழைநீர் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையையோட்டி, மழைநீர் தேக்கம் மற்றும் மழைநீர் தொடர்பான பாதிப்புகள் குறித்து...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...