குழந்தைகள் இல்லங்கள் விருது- கோவையில் விண்ணப்பங்கள் வரவேற்பு…

கோவை: குழந்தைகள் இல்லங்கள் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில், சிறப்பாகச் செயல்படும் குழந்தைகள் இல்லங்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காகத் தகுதியுள்ள குழந்தைகள் இல்லங்கள் மற்றும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertisement

குழந்தைகளின் நலன், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பைச் சிறப்பாக மேற்கொள்ளும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக அரசு குழந்தைகள் இல்லங்கள், தனியார் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் குழந்தைகள் இல்லங்கள், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் மூலம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.

விருதுக்குத் தகுதியான குழந்தைகள் இல்லங்கள், இளைஞர் நீதிச் (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015-ன்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

Advertisement

குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பணியாளர்கள் மீது குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான புகார்கள் எதுவும் நிலுவையில் இருக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகளுக்காக மொத்தம் ரூ.4 லட்சம் பரிசுத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு குழந்தைகள் இல்லங்கள், தனியார் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் குழந்தைகள் இல்லங்கள், சட்ட விதிமுறைகளின்படி செயல்படும் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு என நான்கு பிரிவுகளுக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.

Advertisement

தகுதியுள்ள நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வரும் 28-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு- கோவை மாநகராட்சி நிர்வாகம்…

கோவை: வடகிழக்கு பருவமழையையொட்டி மழைநீர் தேக்கம், மழைநீர் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையையோட்டி, மழைநீர் தேக்கம் மற்றும் மழைநீர் தொடர்பான பாதிப்புகள் குறித்து...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...