கோவையில் உள்ள இசை கல்லூரியில் புதிய வகுப்பறைகள் திறப்பு…

கோவை: மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள அரசு இசை கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது.

Advertisement

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் மலுமிச்சம்பட்டி ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எட்டு வகுப்பறை கட்டடங்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சித்தலைவர் பவன்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி கல்லூரி முதல்வர், முனைவர் விஜய்ராகவன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, முதலமைச்சர் ஆணைக்கிணங்க இந்த தமிழ்நாடு இசைக் கல்லூரியில் ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக எட்டு வகுப்புகள் கட்ட முடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இக்கல்லூரியில் மாணாக்கர்கள் கூடுதல் வகுப்பின்றி கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த வகுப்பறை கட்டடங்கள். இசை கல்லூரியில் மாணாக்கர்கள் இசைக் கல்வியை பயிலுவதற்கு பெரும் உதவியாக அமையம் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, பொள்ளாச்சி (வடக்கு) ஊராட்சி ஒன்றியம், போளிக்கவுண்டன்பாளையம் ஊராட்சி, சுந்தரகவுண்டனூர் கிராமத்தில் கனிமம் மற்றும் சுரங்கம் நிதியின் கீழ் ரூ.28.01 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டடத்தை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...