கோவையில் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை…

கோவை: 1202 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை அமைச்சர் சம்பத் குமார் வழங்கினார்.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 1,202 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) துணை ஆணையர் (கலால்) சாதனைக்குறள், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பேசியதாவது,

Advertisement

குடும்ப அட்டைக் கோரி விண்ணப்பித்த தகுதியுடைய பயனாளிகள், நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுப் பயன்பெறும் வகையில், கோயம்புத்தூர் தெற்கு வட்டத்தில் 137 குடும்ப அட்டைகளும்மேற்கு வட்டத்தில் 144 குடும்ப அட்டைகளும். வடக்கு வட்டத்தில் 169 குடும்ப அட்டைகளும்.

மதுக்கரை வட்டத்தில் 157 குடும்ப அட்டைகளும்பேரூர் வட்டத்தில் 108 குடும்ப அட்டைகளும், கிணத்துக்கடவு வட்டத்தில் 39 குடும்ப அட்டைகளும், அன்னூர் வட்டத்தில் 87 குடும்ப அட்டைகளும்மேட்டுப்பாளையம் வட்டத்தில் 94 குடும்ப அட்டைகளும். ஆனைமலை வட்டத்தில் 26 குடும்ப அட்டைகளும், பொள்ளாச்சி வட்டத்தில் 111 குடும்ப அட்டைகளும்சூலூர் வட்டத்தில் 125 குடும்ப அட்டைகளும் மற்றும் வால்பாறை வட்டத்தில் 5 குடும்ப அட்டைகளும் என மொத்தம் 12 வட்டங்களைச் சேர்ந்த 1,202 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

பொதுமக்களின் விண்ணப்பங்களை துறை ஆலுவலர்கள் விரைந்து பரிசீலனை செய்து, தகுதியுடைய பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என அமைச்சர் தெரிவித்தார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

டெத் ரேஸ் சாகசம் செய்த ஜென்-ஜி இளைஞர்கள் கைது!- மன்னிப்பு கோரிய வீடியோ

டெத் ரேஸ் பாணியில் காரின் மேற்கூரை மற்றும் ஜன்னல் வழியே ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...