கோவையில் புதிய UIDAI ஆதார் சேவை மையம் தொடக்கம்…

கோவை: கோவையில் புதிய UIDAI ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் UIDAI (Unique Identification Authority of India) சார்பில், நாடு முழுவதும் ஆதார் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த நிலையில் ஆதார் தொடர்பான பல்வேறு சேவைகளை மேம்படுத்திடவும், பொதுமக்களுக்கு ஆதார் சேவைகளை எளிதாக வழங்கிடவும் கோவை காந்திபுரம் பகுதியில் புதிய ஆதார் சேவை மையம் இன்று திறக்கப்பட்டுள்ளது.

துவக்க நிகழ்வில், UIDAI பெங்களூர் அலுவலகத்தின் இயக்குனர் பவன்குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். ஆதார் சேவை பெற வந்த முதியவர், ரிப்பன் வெட்டியும் விளக்கேற்றையும் இம்மையத்தை துவக்கி வைத்தார்.

இம்மையத்தில், ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் பெரும் வகையில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த மையம் வாரத்தில் அனைத்து நாட்களும் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆதார் சேவை மையத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு ஏற்ற வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த மையத்தில் ஆதார் புதுப்பிப்பு, ஆதார் பதிவிறக்கம், ஆதார் பிவிசி ஆர்டர் செய்தல், ஆவண புதுப்பிப்பு மற்றும் ஆதார் தொடர்பான தகவல்களை சரி பார்க்கும் சேவைகள் வழங்கப்படுகிறது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...