மத்திய அரசு பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு- கோவையில் இலவச பயிற்சி வகுப்பு…

கோவை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் SSC ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான (CGL) தேர்வு 2025-க்கான விரிவான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Advertisement

SSC CGL 2026 அறிவிப்பின் சிறப்பம்சங்கள்,
மொத்த காலிப்பணியிடங்கள்- 12,255 பணியிடங்கள், பதவிகள்- அசிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீசர் (ASO. இன்ஸ்பெக்டர் (வருமான வரி மத்திய கலால், தடுப்பு அதிகாரி! தணிக்கையாளர் (Auditor)கணக்காளர் (Accountant)ஜூனியர் ஸ்டாட்டிஸ்டிக்கல் ஆபீசர் (JSO) மற்றும் டேக்ஸ் அசிஸ்டெண்ட் (Tax Assistant

ஆன்லைனில் விண்ணபிக்க ஜூன் 22, 2026 (இரவு 11:00 மணி வரை கால அவசாகம் உள்ளது.ப்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் ஜூன் 23, 2026 (இரவு 11:00 மணி) வரை விண்ணப்பத் திருத்தக் காலம் (Correction Window: ஜூன் 29. 2026 முதல் ஜூலை 1.2026 வரை ஆகும்.

கல்வித் தகுதிகள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் (Bachelors Degree) பெற்றிருக்க வேண்டும். குறிப்பு JSO அல்லது அசிஸ்டெண்ட் ஆடிட் ஆபீசர் (AAO) போன்ற குறிப்பிட்ட பதவிகளுக்கு கணிதம் புள்ளியியல் அல்லது வணிகவியல் போன்ற சிறப்புப் பாடங்கள் படித்திருக்க வேண்டும்.

இந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச பயிற்சி வகுப்பு கோயம்புத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 22.06.2026 அன்று காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது.

பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்கள்: தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சி, போட்டித் தேர்வு புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பாடவாரியான தேர்வுகள் & முழு மாதிரித் தேர்வுகள், இலவச பாடக் குறிப்புகள், Study Hall வசதி உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் போட்டித்தேர்வு ஆர்வர்லர்கள் மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாகவோ அல்லது 9361576081 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

Comments are closed.

Recent News

கொண்டையை மறைக்காத அண்ணாமலை- கோவையில் மாணிக்கம் தாகூர் தாக்கு!

கோவை: கொண்டையை மறைக்காமல் அமெரிக்காவில் இருந்து ஒருவர் வருகிறார் என அண்ணாமலையை மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார். கோவை, சவுரிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க அரசை கண்டித்தும், நீட் தேர்வு பாதிப்புகளை விளக்கியும்...

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...