கோவையில் பர்கரில் புழுக்கள்- உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு…

கோவை: பர்கரில் புழு இருந்ததாக வீடியோ வைரலான நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள கேஎஃப்சி உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement

கோவை அவினாசி சாலை நவ இந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் கே எப் சி (தனியார்) உணவகத்தில் நேற்று சில இளைஞர்கள் வாங்கிய பர்கரில் புழுக்கள் இருந்ததாக அந்த இளைஞர்கள் வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

பர்கர் சாப்பிடும் பொழுது புழுக்கள் நெழிந்ததாகவும் உடனடியாக உணவக ஊழியர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பர்கருக்கு பதிலாக மற்றொரு பர்கரை உணவக நிர்வாகம் வழங்கியதாக கூறப்படுகிறது.

இருப்பினும், சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டிய இளைஞர்கள், சம்பவம் குறித்து வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர்.

அந்த வீடியோ காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். உணவகத்தில் சமையல் அறை வாடிக்கையாளர்கள் அமரும் பகுதி என அனைத்து பகுதிகளையும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கொண்டையை மறைக்காத அண்ணாமலை- கோவையில் மாணிக்கம் தாகூர் தாக்கு!

கோவை: கொண்டையை மறைக்காமல் அமெரிக்காவில் இருந்து ஒருவர் வருகிறார் என அண்ணாமலையை மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார். கோவை, சவுரிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க அரசை கண்டித்தும், நீட் தேர்வு பாதிப்புகளை விளக்கியும்...

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...