கோவை: ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஓணம் விழா கொண்டாடிய மாணவர்களால் கல்லூரி வளாகமே விழாக்கோலம் பூண்டது.
கோவை துடியலூர் அருகே வட்டமலைபாளையத்திலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஓணம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்தில் அத்தப்பூகோலம் வரைந்து, கேரள பாரம்பரிய உடையணிந்து,செண்டை மேளம் முழங்க நடனமாடி கொண்டாடினர்.

கோவை துடியலூர் அருகே வட்டமலைபாளையத்திலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஓணம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் D.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்த விழா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
விழாவையொட்டி மாணவ, மாணவியர் கேரள முறையிலான பாரம்பரிய உடையணிந்து கல்லூரிக்கு வந்திருந்தனர். கல்லூரி வளாகத்தில் அத்தப்பூகோலம் வரைந்து செண்டை மேளம் முழங்க மகாபலி சக்கரவர்த்தியை மலர்கள் தூவி வரவேற்றனர்.
பின்னர் மாணவ, மாணவியர்களின் நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அனைவருக்கும் கேரள முறையிலான இனிப்புக்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் துறைத்தலைவர் நிரஞ்சனாதேவி செய்திருந்தார்.




