கோவை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், எர்ணாகுளம்–எஸ்எம்விடி பெங்களூரு இடையே போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எர்ணாகுளம்–எஸ்எம்விடி பெங்களூரு சிறப்பு ரயில் (06147), ஆகஸ்ட் 9 முதல் செப்டம்பர் 6 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.45 மணிக்கு எஸ்எம்விடி பெங்களூரு சென்றடையும்.
இந்த ரயில் போத்தனூரில் அதிகாலை 3.18 மணிக்கும், திருப்பூரில் 4.13 மணிக்கும், ஈரோட்டில் 5.10 மணிக்கும், சேலத்தில் 6.25 மணிக்கும் வந்து செல்லும்.
அதேபோல், எஸ்எம்விடி பெங்களூரு–எர்ணாகுளம் சிறப்பு ரயில் (06148), ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 7 வரை திங்கட்கிழமைகளில் மாலை 4 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
இந்த ரயில் சேலத்தில் இரவு 9.25 மணிக்கும், ஈரோட்டில் 10.35 மணிக்கும், திருப்பூரில் 11.23 மணிக்கும், போத்தனூரில் மறுநாள் அதிகாலை 12.40 மணிக்கும் வந்து செல்லும்.
சிறப்பு ரயில்களில் ஏசி 2-டயர், ஏசி 3-டயர், ஏசி 3-டயர் எகானமி, ஸ்லீப்பர் மற்றும் பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இடம்பெறும்.
அலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், பங்காரப்பேட்டை மற்றும் கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த சிறப்பு ரயில்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





