தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்
அங்கக வேளாண்மை பயிற்சி வழங்கப்படுகிறது.

Advertisement

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்
அங்கக வேளாண்மை பயிற்சி வழங்கப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் வருகின்ற மே 13 ஆம் தேதி புதன்கிழமை (13.05.2026) அங்கக வேளாண்மை கட்டண பயிற்சி நடைபெற உள்ளது.

இந்த பயிற்சியில் அங்கக வேளாண்மையின் அடிப்படை நெறிமுறைகள், அங்ககக் களை மேலாண்மை, அங்கக பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அங்கக உர நிர்வாகம் அங்ககச் சான்றிதழ், அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு மற்றும் அங்கக விளைபொருள்களை சந்தைப்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவோடு கூடிய செயல் விளக்கங்களும் நடைபெறும்.

Advertisement

இந்த பயிற்சிக்கான கட்டணம் ஜிஎஸ்டி உட்பட ரூபாய் 750 ஆகும். விருப்பமுள்ள விவசாயிகள் 0422-2455055 /0422-6611206 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் அல்லது நேரடியாகவும் வந்து பதிவு செய்து இந்த பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நாளை புரட்டாசியின் அபூர்வ பவுர்ணமி… குடும்பத்தில் நிம்மதி இல்லையா? இதை செய்யத் தவறாதீர்கள்…!!

கோவை: நாளை (செப்டம்பர் 26) புரட்டாசி மாதத்தின் 2வது சனிக்கிழமை மிகவும் விஷேசமானது என்பதோடு, அபூர்வ பவுர்ணமியும் கூடவே வருகிறது. இந்த நன்னாளில் பெண்கள் வீடுகளில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் குறித்து...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...