கோவையில் சிறுதானிய பொருட்கள் தயாரிப்பு பயிற்சி…

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி 12.05.2026 மற்றும் 13.05.2026 ஆகிய நாட்களில் நடைபெறும்.

சிறு தானிய வகைகளான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு போன்றவை மக்களால் உணவில் ஓரளவு சேர்த்துக் கொள்ளப்படுகிறது. நகர்ப்புறங்களில் கேழ்வரகு மட்டும் பயன்பாட்டில் உள்ளது. சிறு தானிய வகைகளில் உள்ள சத்துக்களையும் அவற்றை உபயோகித்து தயாரிக்கப்படும் மதிப்பூட்டப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

அதன்படி, பாரம்பரிய உணவுகள், பிழிதல், அடுமனைப்பொருட்க, உடனடி தயார்நிலை உணவுகள் ஆகியவற்றிற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- (ரூ.1500/- + GST 18%) – பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும்

Advertisement

முன்பதிவிற்கு : https://forms.gle/4AeCvBPx3NX6igEs6
பயிற்சி நடைபெறும் இடம் – அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,
வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641 003.

மேலும் விவரங்களுக்கு:
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,
வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்,
கோயபுத்தூர்-641003.
அலைபேசி எண் – 94885 18268,
மின்னஞ்சல்- phte@tnau.ac.in

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.